search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமர்நாத் யாத்திர"

    அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra
    ஸ்ரீநகர் : 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 

    60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை அமர்நாத் பனி லிங்கத்தை 2 லட்சத்து 46 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்து 502 பேர் அமர்நாத் கோவிலில் தரிசனம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், ராஜா என்னும் பக்தர் பல்தால் அடிவார முகாமில் காத்திருந்தபோது உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமர்நாத் யாத்திரையின்போது உடல்நலக் குறைவு, விபத்து மற்றும் நிலச்சரிவு போன்றவைகளால் இதுவரை 36 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #AmarnathYatra
    ×